கோவை, மார்ச் 10: கோவை வஉசி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜி.டி.நாயுடு முழு உருவச்சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைக்கிறார். தமிழ்நாடு அரசு செய்தி-மக்கள் தொடர்பு துறையின் மானிய கோரிக்கையின்போது, தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், “தமிழ்நாடு தந்த அறிவியல் மாமேதைகளில் ஒருவரும், இயந்திரவியல் மற்றும் விவசாயம் சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல்வேறு அரிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியவரும், கல்வியாளராகவும், எளியோருக்கு உதவும் நற்குணம் வாய்ந்தவராகவும் விளங்கிய ஜி.டி நாயுடு-வுக்கு கோவையில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் முழு உருவச்சிலை நிறுவப்படும்” என்று அறிவித்தார்.
