பழங்குடி வாலிபர் மர்மச்சாவு

 

கோத்தகிரி,நவ.23: கோத்தகிரி அருகேயுள்ள முள்ளூர் பகுதியில் வசித்து வந்த சிவா(33) என்பவர் நேற்றுமுன்தினம் இரவு கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதியில் காயங்களுடன் பஸ் ஸ்டாப்பில் இறந்து கிடந்தார். அதிகாலை நேரத்தில் பஸ்சுக்கு காத்திருந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி வீரபாண்டி மற்றும் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தன் தலைமையிலான போலீசார் காயங்களுடன் இருந்த சிவாவின் உடலை பார்த்த போது வயிற்றுக்கு கீழ் பகுதியில் ரத்த காயங்களுடனும், ஆசன வாயில் பகுதியிலும் ரத்த காயங்களுடன் அவர் இறந்து கிடந்தது தெரிய வந்தது. அவரின் உடல் கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

சிவா கொலை செய்யப்பட்டாரா? மது போதையில் கீழே விழுந்து உடல்நிலை முடியாமல் இறந்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்து நிலையம் பகுதியை சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்கள் பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். ரத்த காயங்களுடன் கோத்தகிரி பேருந்து நிலையத்தில் பழங்குடியின வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் கோத்தகிரி சுற்றுவட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post பழங்குடி வாலிபர் மர்மச்சாவு appeared first on Dinakaran.

Related Stories: