பொதுமக்களின் குறைகளை விரைவில் தீர்க்க குழு அமைப்பு ஆவணங்களை சமர்ப்பித்தால் உடனடியாக தீர்வு

 

ஊட்டி,மார்ச்21: சட்டமன்ற தேர்தலையொட்டி பறிமுதல் செய்யப்படும் பணம் மற்றும் பொருட்கள் தொடர்பான பொதுமக்களின் குறைகளை விரைவாக தீர்க்கும் வகையில் நீலகிரி மாவட்ட குறைதீர் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த நடைமுறையின்படி ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமான பணத்தை உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லமுடியாது.
அவ்வாறு ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டும் பணம் மற்றும் பரிசு பொருட்கள் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும்போது அந்த பணம் திரும்பக் கொடுக்கப்பட்டு வருகிறது.

Related Stories: