குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தையால் மக்கள் பீதி

 

குன்னூர்,மார்ச்21: குன்னூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தையால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி சிறுத்தைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவது தொடர் கதையாகி உள்ளது.

இந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள பாய்ஸ் கம்பெனி பகுதியில் இருந்து கேட்டில் பவுண்ட் செல்லும் சாலையில் நேற்று அதிகாலை நேரத்தில் சிறுத்தை ஒன்று உணவு தேடி அலைந்துள்ளது.ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் சாலையோரம் மிக நிதானமாக சிறுத்தை நடந்து சென்றது.
அந்தச் சாலையில் அமைந்துள்ள ஒரு வணிக வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகியுள்ளது.

Related Stories: