ஆரணி, நவ.23: தச்சூரில் அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவரை போலீசார் நேற்று கைது செய்தனர். ஆரணி அடுத்த தச்சூர் சமத்துவபுரம் கிராமத்தில் உள்ள நரிக்குறவர் காலனியை சேர்ந்த பாலு(40). இவர் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக தாலுகா போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில், எஸ்ஐ அருண்குமார் மற்றும் போலீசார் பாலுவின் வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது, நாட்டுத்துப்பாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், காட்டு விலங்குகள், பன்றிகள் வேட்டையாட துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து பாலுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
The post நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது தச்சூரில் அனுமதியின்றி appeared first on Dinakaran.