திருவாரூரில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி சைக்கிள் பேரணி

திருவாரூர், நவ. 11: திருவாரூரில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தி நடைபெற்ற சைக்கிள் பேரணியை மாவட்ட வன அலுவலர் காந்த் துவக்கிவைத்தார். நிலைத்த நீடித்த வாழ்வியல் முறைகளை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்திய அரசு வனம் மற்றும் காலநிலைமாற்றம் துறை மற்றும் தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறையின் சுற்றுச்சூழல் கல்வித்திட்டத்தின்படி திருவாரூர் மாவட்டத்தில் தேசியப் பசுமைப்படை மூலம் சைக்கிள் பேரணி நடைப்பெற்றது.

வேலுடையார் பள்ளியிலிருந்து புறப்பட்ட பேரணிக்கு பள்ளி தாளாளர் தியாகபாரி தலைமை வகித்தார். தலைமையாசிரியர் அகிலன் முன்னிலை வகித்தார். தேசியப் பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் நடனம் பேரணியின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார். பேரணியை மாவட்ட வன அலுவலர் காந்த் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

தாலுக்கா காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராகுல், பாலம் தொண்டு நிறுவனச்செயலாளர் செந்தில்குமார், முதலமைச்சரின் காடுகள் வளர்ப்பு திட்டத்திற்கான பசுமை தோழர் பேகன் ஜமீன் உட்பட பலர் கலந்துகொண்டு பேசினர். பேரணியில் மரம் வளர்ப்பு, பிளாஸ்டிக் தீமைகள், நீர்நிலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளுடன் பல்வேறு பள்ளிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பசுமை சீருடையணிந்து சைக்கிள் பேரணியாக நகரின் முக்கிய வீதிகளை சுற்றிவந்தனர். வ.சோ மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை, திருநெய்ப்பேர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஜெகதீஸ்வரன் ஒருங்கிணைத்தார்.

The post திருவாரூரில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி சைக்கிள் பேரணி appeared first on Dinakaran.

Related Stories: