இந்நிலையில் காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பதிவில், “நிலக்கரி ராயல்டி மற்றும் ஒன்றிய அரசின் திட்டப்பலன்களில் ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு பல லட்சம் கோடி ரூபாயை பாஜ அரசு பாக்கி வைத்துள்ளது. ஜார்க்கண்டில் நிலக்கரி சுரங்கங்கள் கோல் இந்தியா லிமிடெட்டின் துணை நிறுவனங்களால் இயக்கப்படுகின்றன. அவை அம்மாநிலத்துக்கு மிகப்பெரும் அளவிலான தொகையை நிலுவையில் வைத்துள்ளன. நிலங்களுக்கான இழப்பீட்டு தொகை ரூ.1,01,142 கோடி இன்னும் வழங்கப்படவில்லை.
பொதுவான நிலுவை தொகை ரூ.32,000 கோடி மற்றும் எடுக்கப்பட்ட நிலக்கரிகளுக்கான ராயல்டி தொகை ரூ.2,500 கோடியும் இன்னும் வழங்கப்படவில்லை. உயிரியல் ரீதியாக பிறக்காத பிரதமர் ஏன் இந்த நிதியை வௌியிடவில்லை? ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்த அம்மாநில மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறாரா? மாநில பாஜ தலைமையால் ஏன் மாநிலத்துக்கான எந்த நிதியையும் பெற முடியவில்லை? ஜார்க்கண்ட் மக்களிடம் வாக்கு கேட்கும் முன் மாநிலத்துக்கு ரூ.1.36 லட்சம் கோடியை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்துக்கு பாஜ பதில் சொல்ல வேண்டும்” என அடுக்கடுக்கான கேள்விகளுடன் வலியுறுத்தி உள்ளார்.
The post பல லட்சம் கோடி தொகை நிலுவை ஜார்க்கண்ட் மக்களுக்கு பாஜ பதில் சொல்ல வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.