திருத்துறைப்பூண்டியில் உலக போலியோ விழிப்புணர்வு பேரணி

 

திருத்துறைப்பூண்டி, அக். 29: போலியோ விழிப்புணர்வு பேரணி நடந்தது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி டெல்டா ரோட்டரி சங்கம் மற்றும் ரோட்டரி சங்கம், இன்னர் வீல் சங்கம் இணைந்து திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை முதல் புதிய பேருந்து நிலையம் வரை போலியோ விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. டெல்டா ரோட்டரி சங்க தலைவர் பாலமுருகன், ரோட்டரி சங்க தலைவர் பாலு, இன்னர்வீல் சங்க தலைவி தமிழரசி தலைமையில் நகர் மன்ற தலைவர் கவிதா பாண்டியன், கொடி அசைத்து பேரணியை தொடங்கிவைத்தார்.

இதில் விஐஏ கேட்டரிங் கல்லூரி மற்றும் நர்சிங் கல்லூரி, பிரைட் பீப்புள் சமுதாய கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் ரோட்டரி சங்கங்களின் உதவி ஆளுநர்கள் முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டடனர். பொது மக்களிடையே போலியோ விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

The post திருத்துறைப்பூண்டியில் உலக போலியோ விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: