ரிசர்வ் வங்கிக்கு மாஜி கவர்னர் எச்சரிக்கை

புதுடெல்லி: பணவீக்கம் தொடர்பான கணக்கீட்டில் இருந்து, உணவு விலை பணவீக்கத்தை நீக்குவது தவறானது. ரிசர்வ் வங்கி கணிப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கை போய்விடும்’ என ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி: பணவீக்கம் தொடர்பான கணக்கீட்டில் இருந்து, உணவு விலை பணவீக்கத்தை நீக்குவது தவறானது. பணவீக்கத்தின் முக்கியமான பகுதிகளை நீக்கிவிட்டு, பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூற கூடாது. அப்போது உணவு பொருட்கள் அல்லது வேறு ஏதாவது விலை விண்ணை முட்டுமளவு உயர்ந்தால், அது பணவீக்க கணக்கீட்டுக்குள் இல்லாத நிலையில், ரிசர்வ் வங்கி கணிப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படாது.

அனைவருக்கும் வங்கி கணக்குகளை பெறுவது என்பது பிரதமரால் உருவாக்கப்பட்ட ஒரு முயற்சியாகும். வங்கி கணக்குகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் அது மிகப்பெரிய வெற்றியாகும். ஆனால் அடுத்த கட்டமாக மக்கள் தங்கள் வங்கி கணக்குகளை பயன்படுத்தினார்களா என்பதை உறுதிப்படுத்துவது, கணக்கை திறப்பது மிகவும் எளிதானது, ஆனால் அவர்கள் அதை செயலற்ற நிலையில் விட்டால் என்ன செய்வது? தற்போது 46 சதவீதமாக உள்ளது.

 

The post ரிசர்வ் வங்கிக்கு மாஜி கவர்னர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: