எரவாஞ்சேரி ஊராட்சியில் புதிய மின்மாற்றி துவக்க விழா

 

செம்பனார்கோயில், செப்.1: எரவாஞ்சேரியில் புதிய மின்மாற்றியை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் துவக்கி வைத்தார். மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே எரவாஞ்சேரி ஊராட்சி பகுதியில் குறைந்த மின் அழுத்தத்தால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் புதிய மின் மாற்றி அமைக்க வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று 23 கிலோவாட் திறன் கொண்ட ரூ.6 லட்சம் செலவில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது.

இந்த புதிய மின்மாற்றியின் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு மின்வாரிய செயற்பொறியாளர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் , உதவி மின் பொறியாளர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் கலந்து கொண்டு புதிய மின்மாற்றியை தொடங்கி வைத்து பேசினார். இதில் தஞ்சை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பிஎம். ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக், முன்னாள் எம்எல்ஏ சித்திக், ஊராட்சி மன்ற தலைவர் பகவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post எரவாஞ்சேரி ஊராட்சியில் புதிய மின்மாற்றி துவக்க விழா appeared first on Dinakaran.

Related Stories: