புதுடெல்லி: புதிய வெளியுறவு துறை செயலாளராக விக்ரம் மிஸ்ரி நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். வெளியுறவு துறை செயலாளராக இருந்த மோகன் வினய் குவாத்ரா ஒய்வு பெற்றதை தொடர்ந்து வெளியுறவு துறை செயலாளராக விக்ரம் மிஸ்ரி நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். 1989ம் ஆண்டு ஐஎப்எஸ் அதிகாரியான இவர், 2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை ஸ்பெயினுக்கான இந்திய தூதராகவும், 2016ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை மியான்மருக்கான இந்திய தூதராகவும் பணியாற்றினார். தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்படுவதற்கு முன்பாக 2019ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை சீனாவுக்கான இந்திய தூதராக பணியாற்றியுள்ளார். கிழக்கு லடாக் எல்லை பிரச்னை உட்பட பல்வேறு வெளியுறவு கொள்கை விவகாரங்களில் விக்ரம் மிஸ்ரி முக்கிய பங்காற்றியுள்ளார். புதிய செயலாளராக பொறுப்பேற்றுள்ள விக்ரம் மிஸ்ரிக்கு வெளியுறவுதுறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
The post புதிய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி பொறுப்பேற்பு appeared first on Dinakaran.