புதுடெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் ஸ்மார்ட் கண்ணாடிகள், பேனா காமிராக்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்களவை செயலகம் நேற்று முன்தினம் வௌியிட்ட அறிவிப்பில், “ஸ்மார்ட் கண்ணாடிகள், பேனா காமிராக்கள் மற்றும் ஸ்மார்ட் வாட்ச்கள் போன்ற ஏராளமான மேம்பட்ட சாதனங்கள் தற்போது பரவலாக உள்ளது. இந்த சாதனங்களில் சில, நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனியுரிமையில் தலையிடுவதற்கும், நாடாளுமன்ற சிறப்புரிமைகளை மீறுவதற்கும் பயன்படுத்தப்படலாம். எனவே, நாடாளுமன்ற வளாகத்தின் எந்தவொரு பகுதியிலும் இதுபோன்ற சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
