ஸ்ரீநகர்: காஷ்மீரில் உள்ள 5 மாவட்டங்களில் 5 பனிச்சரிவு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் உயரமான பகுதிகள் பெரும்பாலானவற்றில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.வரும் நாட்களில் இந்த பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் தோடா, கந்தர்பால்,கிஷ்த்வார், பூஞ்ச் மற்றும் ராம்பன் ஆகிய மாவட்டங்களில் பனிச்சரிவு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பனிச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளை பொதுமக்கள் தவிர்த்து அரசின் அதிகாரப்பூர்வ ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
