மேகதாது அணை அறிக்கை தயாரிப்பு: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தகவல்

பெங்களூரு கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார் டெல்லியில் நடந்த நதிகள் இணைப்பு கூட்டத்தில் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் மாநில நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து அமைச்சருடன் ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து நிருபர்களிடம் டிகே சிவகுமார் கூறியதாவது: மேகதாது அணை கட்டுவதற்கான தடை விலகியுள்ளது. அணை கட்டுவதால் என்ன பாதிப்பு ஏற்படும்? அணை எப்படி அமையும்? என்பது உள்ளிட்ட விபரங்களுடன் விரிவான அறிக்கை தயாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த அறிக்கை தயாரிக்கப்பட்ட பிறகு ஒன்றிய அரசிடம் இதை சமர்பித்து அனுமதி கோரப்படும். மேகதாது அணை கட்டுவதற்கான அனுமதி பெறுவது, விரிவான அறிக்கை தயாரிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்பார்வையிடும் பொறுப்பு மண்டியா அல்லது பெங்களூரு கிராமப்புற மாவட்ட கலெக்டர்களுக்கு அளிக்கப்படும். மேகதாது அணை கட்டுவதற்கான நடவடிக்கையை நாங்கள் துரிதமாக எடுத்து வருகிறோம் என்றார்.

Related Stories: