அசோக் செல்வனுக்கு ஜோடியான நிகிலா விமல்

சென்னை: போர் தொழில் படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நிகிலா விமல் நடிக்கிறார். அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம், இ4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் மற்றும் எப்ரியஸ் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து புலனாய்வு திரில்லர் ஜானரிலான ‘போர் தொழில்’ எனும் திரைப்படத்தை தயாரித்து வெளியிடுகிறது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த படத்தில் அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டைட்டிலை நேற்று வெளியிட்டிருக்கிறார்கள். இதற்காக பிரத்யேகமான காணொலி ஒன்றையும் உருவாக்கி வெளியிட்டிருக்கின்றனர். ‘போர் தொழில்’ எனும் தலைப்பு, ‘ஆர்ட் ஆஃப் வார்’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. விரைவில் திரையரங்குகளில் வெளியிட தயாராகி இருக்கும் இந்த திரைப்படம், ரசிகர்களுக்கு வித்தியாசமான திரில்லர் அனுபவத்தை வழங்கும் என்கிறார் அசோக் செல்வன்.

The post அசோக் செல்வனுக்கு ஜோடியான நிகிலா விமல் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: