மயிலாடுதுறையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் 325 மனுக்கள் பெறப்பட்டன

மயிலாடுதுறை, ஜூலை 2: மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 325 மனுக்கள் பெறப்பட்டன. மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகைபுரிந்து மனுக்களை அளித்தனர். இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டாமாறுதல், கோரி 79 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 61 மனுக்களும், முதியோர், மாற்றுத்திறனாளிகள், மற்றும் விதவை உதவித்தொகைகோரி 43 மனுக்களும், புகார் தொடர்பான மனுக்கள் 21 மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவிதொகை, வங்கிகடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள் கோரி 17 மனுக்களும், அடிப்படை வசதி கோரி 13 மனுக்களும், நிலஅபகரிப்பு தொடர்பாக 27 மனுக்களும், கலைஞர் உரிமைத்தொகை வேண்டி 48 மனுக்களும், தொழிற்கடன் வழங்க கோரி 16 மனுக்களும் மொத்தம் 325 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களை சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், டிஆர்ஓ மணிமேகலை, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயக அமுல்ராஜ், யுரேகா, மகளிர் திட்டம் திட்ட அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். நாகப்பட்டினம்,ஜூலை2: நாகப்பட்டினம் மாவட்டத்தில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பு இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் என கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் வயிற்றுப்போக்கினால் குழந்தைகள் மரணம் இல்லா தமிழகம் என்பதை நோக்கி செல்கிறது. இதற்காக தமிழக அரசு மற்றும் பொது சுகாதார துறையின் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் 1 லட்சம் குழந்தைகள் வயிற்று போக்கினால் இறக்கிறார்கள், இதை தடுப்பதற்காக ஆண்டுதோறும் 15 நாட்கள் இரு வார கால தீவிர வயிற்றுப்போக்கு தடுப்புத்திட்டம் நடைபெற்று வந்தது. இந்த ஆண்டு வயிற்றுப்போக்கினால் ஒரு குழந்தை கூட இறக்க கூடாது என தமிழக அரசும் பொது சுகாதார துறையும் முடிவு செய்து 15 நாட்கள் இருந்த வயிற்றுப்போக்கு தடுப்புத்திட்டத்தை ஒரு மாத கால தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு திட்டமாக நடத்துவது என்றும் அதன் மூலம் ஒரு குழந்தை கூட வயிற்றுபோக்கினால் இறக்காமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள 24 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள். 3 நகர ஆரம்ப சுகாதார நிலையங்கள், 125 துணை சுகாதார நிலையங்கள் 633 அங்கன்வாடி மையங்கள் மூலமாக கிராம சுகாதார செவிலியர்கள்,நகர சுகாதார செவிலியர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று ஒவ்வொரு வீட்டிலும் 2 ஓஆர்எஸ் பாக்கெட்டுகளும், 14 சிங்க் மாத்திரைகளும் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பிற்காக வைக்க உள்ளனர். இதனால் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு இரவு நேரங்களில் வயிற்றுப்போக்கு ஏற்படும் போது அவர்களின் உடலில் நீரிழப்பு ஏற்படுவதை தடுக்க இந்த ஓஆர்எஸ் மற்றும் சிங்க் மாத்திரைகளை உபயோகப்படுத்தி குழந்தைகள் சோர்வடையாமல் பாதுகாத்து மறு நாள் மருத்துவரிடம் காண்பித்து குழந்தைகளின் நோயை குணப்படுத்தி கொள்ளலாம்.

இதனால் குழந்தைகள் மரணம் தடுக்கப்படும். வயிற்றுப்போக்கு ஏற்படும் காலங்களில் ஒரு பாக்கெட் ஓஆர்எஸ் 1 லிட்டர் சுத்தமான நீரில் கலந்து குழந்தைகளின் நீர் இழப்பிற்கு ஏற்ப அளிக்க வேண்டும். வயிற்றுப்போக்கு ஏற்படும் காலங்களில் சிங்க் மாத்திரை 2 மாதம் முதல் 6 மாத குழந்தைக்கு அரை மாத்திரையும்,6 மாதம் முதல் 5 வயதுள்ள குழந்தைகளுக்கு 1 மாத்திரையும்,தாய்பால் அல்லது சுத்தமான தண்ணீரில் கலந்து 14 நாட்களுக்கு தொடர்ந்து கொடுக்க வேண்டும். இந்த ஒரு மாத காலத்திற்கு அனைத்து அங்கன்வாடிகள்,துணை சுகாதார நிலையங்கள்,ஆரம்ப சுகாதார நிலையங்கள்,அரசு மருத்துவமனைகள்,தலைமை மாவட்ட மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி ஆகிய இடங்களில் ஓஆர்எஸ் மற்றும் சிங்க் கார்னர் அமைத்து எப்போதும் ஓஆர்எஸ் மற்றும் சிங்க் மாத்திரைகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே பொது மக்கள் அனைவரும் தங்கள் வீடு தேடி வரும் கிராம,நகர சுகாதார செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோரின் அறிவுரைக்கு ஏற்ப தங்கள் வீடுகளில் கொடுக்கப்பட்டுள்ள ஓஆர்எஸ் பாக்கெட்டுகள் மற்றும் சிங்க் மாத்திரைகளை உபயோகப்படுத்தி வயிற்றுப்போக்கு காலங்களில் குழந்தைகளுக்கு நீர் இழப்பு மற்றும் மரணம் ஏற்படுவதை தடுப்பதுடன் தன்சுத்தம்,கைசுத்தம்,உணவு தயாரிப்பதில் சுத்தம் ஆகியவற்றை பேணி குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு வராமல் தடுக்க வேண்டும். தீவிரம் மற்றும் சுமாரான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளை அருகிலுள்ள அரசு மருத்துவமனைகள்,அல்லது மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி உரிய சிகிச்கை பெற்று நாகப்பட்டினம் மாவட்டத்தை வயிற்றுப்போக்கினால் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மரணம் இல்லா மாவட்டமாக மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

The post மயிலாடுதுறையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் 325 மனுக்கள் பெறப்பட்டன appeared first on Dinakaran.

Related Stories: