புத்தக திருவிழாவை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்கள் உண்டியலில் பணம் சேமிப்பு பழக்கத்தை தொடங்கினர்

நாகப்பட்டினம்,ஜூலை2: நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்கள் உண்டியலில் பணம் சேமிக்கும் பழக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 16 முதல் 26 வரை நாகப்பட்டினம் அரசு தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் நாகை சங்கமம் சார்பில் 3 வது புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் கலந்துகொள்ள உள்ள அனைத்து அரசு பள்ளி மாணவர்களும் புத்தகம் வாங்க ஆர்வத்தை தூண்டும் வகையில் உண்டியலில் பணம் சேமிக்கும் பழக்கம் வரவேண்டும். அவ்வாறு சேமிக்கப்படும் தொகையினை புத்தகத் திருவிழா நடைபெறும் போது புத்தகங்கள் வாங்கி கொள்ளலாம் என்று மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு பள்ளி மாணவர்கள் உண்டியலில் பணம் சேமிக்க முன்வரவேண்டும் என கடந்த மாதம் முதல் கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் அறிவுறுத்தி இருந்தார்.

அதன்படி ஆயக்காரன்புலம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் உண்டியலில் பணம் சேர்க்கும் பழக்கத்தை தொடங்கி விட்டார்கள், இதை போல் மற்ற அரசு பள்ளி மாணவர்களும் உண்டியல் மூலம் பணம் சேமிக்கும் பழக்கத்தை பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஊக்கவிக்கவேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post புத்தக திருவிழாவை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்கள் உண்டியலில் பணம் சேமிப்பு பழக்கத்தை தொடங்கினர் appeared first on Dinakaran.

Related Stories: