அரியானா கல்வித்துறையில் மோசடி 4 லட்சம் போலி மாணவர் சேர்க்கை: 5 ஆண்டுக்கு பின் சிபிஐ வழக்குபதிவு

சண்டிகர்: அரியானா கல்வித்துறையில் 4 லட்சம் போலி மாணவர் சேர்க்கை விவகாரத்தில் 5 ஆண்டுக்கு பின் சிபிஐ வழக்குபதிவு செய்துள்ளது. 4 லட்சம் போலி மாணவர் சேர்க்கை மூலம் நிதி மோசடி செய்த விவகாரம் குறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. அரியானா அரசு பள்ளிகளில் கடந்த 2016ல் சுமார் 22 லட்சம் மாணவர்கள் பயில்வதாக தரவுகள் தெரிவித்தன. உண்மையில் 18 லட்சம் மாணவர்கள் மட்டுமே அரசுப் பள்ளிகளில் படிப்பதும் மீதமுள்ள எண்ணிக்கையான 4 லட்சம் மாணவர்கள், போலி சேர்க்கை என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டது. கல்வியை ஊக்குவிக்க ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் நலத்திட்டங்களுக்கு அரசு நிதி ஒதுக்கிறது. ஆனால் இந்த நிதியில் முறைகேடு செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து விஜிலன்ஸ் துறையின் பரிந்துரையின் பேரில் அரியானாவில் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க பஞ்சாப், அரியானா உயர் நீதிமன்றம் கடந்த 2019 நவம்பரில் உத்தரவிட்டது. ஆனால் உச்சநீதிமன்றத்தை அணுகிய சிபிஐ, ‘விசாரணைக்கு பெரும் மனிதவளம் தேவைப்படும் என்பதால், விசாரணையை மாநில காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று கோரியது. ஆனால் இந்த மனுவை உச்சநீதிமன்றம் சமீபத்தில் நிராகரித்ததால், ஐந்தாண்டுகளுக்க பின் சிபிஐ வழக்குப் விசாரணையை தொடங்கிள்ளது. கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பின் 4 லட்சம் போலி மாணவர் சேர்க்கை மூலம் நிதி மோசடி செய்த விவகாரம் பூதாகரமாகி உள்ளது. இவ்விவகாரத்தகல் சிபிஐ மேலும் ஒரு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

 

The post அரியானா கல்வித்துறையில் மோசடி 4 லட்சம் போலி மாணவர் சேர்க்கை: 5 ஆண்டுக்கு பின் சிபிஐ வழக்குபதிவு appeared first on Dinakaran.

Related Stories: