சிதம்பரம் அரசு மருத்துவமனையில் இரு குடும்பத்தினர் மோதல்- பரபரப்பு

சிதம்பரம், ஜூன் 26: இளம்பெண் தற்கொலை சம்பந்தமாக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் இரு குடும்பத்தினர் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி வண்டுராயன்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் செல்வகுமார் (35). சிதம்பரம் பெரியார் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்த சூர்யா (24) என்பவருக்கும் கடந்த 17.9.23ம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவரும் புவனகிரியில் உள்ள பெருமாத்தூர் பாலுநகர் பகுதியில் வாடகை வீட்டில் குடி இருந்து வருகின்றனர். இவர்களுக்கு குழந்தை இல்லை.

இந்நிலையில் குழந்தை இல்லாத காரணத்தால் செல்வகுமார் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் ரூ. 5 லட்சம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த சூர்யா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பெட்ரூம் ஜன்னலில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த புவனகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சூர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரத்தில் உள்ள அரசு காமராஜர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து நேற்று காலை மருத்துவமனைக்கு சூர்யாவின் உறவினர்கள் வந்துள்ளனர். அப்போது சூர்யா உறவினர்கள் சூர்யா தற்கொலை செய்யவில்லை, அவளை பணம் கேட்டு அடித்து கொடுமைப்படுத்தி கொலை செய்துள்ளனர் என்று கூறியதாக தெரிகிறது. அப்போது மருத்துவமனைக்கு வந்த செல்வகுமார் உறவினர்களுக்கும், சூர்யாவின் உறவினர்களுக்கும் தகராறு ஏற்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த போலீசார் இருவரையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இறந்துபோன சூர்யாவுக்கு திருமணம் ஒரு வருடம் மட்டுமே ஆவதால் சிதம்பரம் உதவி ஆட்சியர் ராஷ்மி ராணி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

The post சிதம்பரம் அரசு மருத்துவமனையில் இரு குடும்பத்தினர் மோதல்- பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: