கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக, தியானலிங்கம், லிங்கபைரவி மற்றும் ஆதியோகியை தரிசிப்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வருகை தருகின்றனர்.
இந்நிலையில் ஒரு நாள் மட்டும் பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என ஈஷா யோகா மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக ஈஷா மையம் சார்பில் தெரிவித்ததாவது; ஒவ்வொரு ஆண்டும் ஈஷாவில் உள்ள தியானலிங்கம் மற்றும் ஆதியோகி வளாகங்களில் பல்வேறு பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம்.
அந்த அடிப்படையில் நாளை மறுநாள் ஜூன் 27ம் தேதி ஒரு நாள் மட்டும் தியானலிங்கம் மற்றும் ஆதியோகி வளாகங்கள் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டிருக்கும். இதனால், அன்றைய தினம் பக்தர்கள் ஈஷாவிற்கு வருகை தருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் ஜூன் 28ம் தேதி முதல் பக்தர்கள் வழக்கம் போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
The post ஆதியோகி மற்றும் தியானலிங்க வளாகங்கள் பராமரிப்பு பணிகளுக்காக ஜூன் 27ம் தேதி மூடப்படுகிறது! appeared first on Dinakaran.