மதுரையில் ஓய்வு பொதுப்பணி துறை ஊழியர் மாடியிலிருந்து தவறி விழுந்து பலி

மதுரை, ஜூன் 25: மதுரையில் ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை ஊழியர் மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். மதுரை ஆனையூர் கோசாகுளம் சேதுபதி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் லியாகத் அலி(76). இவர் ஓய்வு பெற்ற பொதுப்பணி துறை ஊழியர். சம்பவத்தன்று இவரது வீட்டு மாடியில் மரக்கிளை விழுந்தது.

எனவே மாடியில் ஏறி மரக்கிளையை வெட்டி கொண்டிருந்தார். அப்போது தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து மயங்கினார். உடனே குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கூடல் புதூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post மதுரையில் ஓய்வு பொதுப்பணி துறை ஊழியர் மாடியிலிருந்து தவறி விழுந்து பலி appeared first on Dinakaran.

Related Stories: