அரியலூர் அரசு கல்லூரியில் மனநல விழிப்புணர்வு கருத்தரங்கம்

 

அரியலூர், ஜூன் 22: சர்வ தேச யோகா தினத்தை முன்னிட்டு அரியலூர் அரசு கலைக்கல்லூரி ‘மனம்’ மன்றம் ஏற்பாடு செய்த மாணவர்களுக்கான உடல் நலம் மற்றும் மனநலம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கில், கல்லூரி முதல்வர் முனைவர் ஸ்ரீதரன், தலைமையேற்று தலைமையுரையாற்றினார். ஆங்கிலத்துறை தலைவர் லதா முன்னிலை வகித்தார்.

அரியலூர் ஹார்ட்ஃபுல்னெஸ் இன்ஸ்டிடியூட் யோகா பயிற்றுனர் தனபால் ‘தூய்மை வாழ்கை விதியை நெசவு செய்கிறது’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். திரளான கல்லூரி மாணவ, மாணவிகள் பங்குபெற்று பயன் அடைந்தனர். ஆங்கிலத்துறை மாணவி ஜெயஸ்ரீ நன்றி கூறினார். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை மனம் மன்ற ஒருங்கிணைப்பாளர், முனைவர் வேலுசாமி செய்திருந்தார்.

The post அரியலூர் அரசு கல்லூரியில் மனநல விழிப்புணர்வு கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Related Stories: