இனி நீங்கள் ஓடவும் முடியாது… ஒளியவும் முடியாது…

காரைக்கால், ஜூன் 28: புதுச்சோி மாநிலம், காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு தொகுதிக்குட்பட்ட கோட்டுச்சேரியில் உள்ள அரசு வஉசி பள்ளியில் போதைப் பொருட்களை தடுக்கும் வகையில் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான சந்திர பிரியங்கா கேட்டுக் கொண்டதன்பேரில் புதுச்சேரியை சேர்ந்த தனியார் அமைப்பு உதவியுடன் பள்ளியை சுற்றி சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதற்கான விழாவில் நேற்று பங்கேற்ற சந்திர பிரியங்கா, கேமரா செயல்பாடுகளை தொடங்கி வைத்து மாணவர்கள் மத்தியில் பேசுகையில், பள்ளிப் பருவத்தில் படிப்பது மட்டுமே கவனம் கொண்டு இருக்க வேண்டும்… யாருக்கும் தொந்தரவு தராத வகையில் வாழ்க்கையை வாழ வேண்டும்… இதற்கு நல்ல விஷயங்களை மனதில் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

போதையால் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. போதை பாதைக்கு சென்றால் வாழ்வில் வெற்றி பெறுவது மிகப்பெரிய கடினமாக மாறிவிடும் என குறிப்பிட்ட சந்திர பிரியங்கா, பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று பெற்றோர் நினைப்பதுபோல ஆசிரியர்களுக்கும் அந்த பொறுப்பு இருக்கிறது. அதனால்தான் உங்களை கண்காணிக்க கண்காணிப்பு கேமரா பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இனி நீங்கள், ”ஓடவும் முடியாது… ஒளியவும் முடியாது…” என பிக் பாஸ் ஷோவில் நடிகர் கமல் கூறும் வசனத்தை சொல்லி சந்திர பிரியங்கா அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.

The post இனி நீங்கள் ஓடவும் முடியாது… ஒளியவும் முடியாது… appeared first on Dinakaran.

Related Stories: