மனைவியை தாக்கிய கணவர் கைது

மானூர், ஜூன் 28: மானூர் அருகேயுள்ள காந்தீஸ்வரன்புதூரைச் சேர்ந்தவர் மாடசாமி(65). இவரது மனைவி வெள்ளத்தாய்(61). இவரது மகள் லட்சுமியை தனது தாயின் சகோதரனுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். மாடசாமிக்கும் அவரது மனைவிக்கும் சொத்து பிரச்சனை இருந்து வந்தது. இதில் மாடசாமி அவரது சொத்துக்களை தனது சகோதரன் குழந்தைகளுக்கு எழுதிக் கொடுக்கப்போவதாக கூறியுள்ளார். இதனால் குடும்பத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த மாடசாமி கத்தியால் மனைவியை தாக்கியுள்ளார். இதையடுத்து அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் மானூர் எஸ்ஐ அழகு மாரிச்செல்வம் வழக்குப்பதிவு செய்து மாடசாமியை கைது செய்தார்.

The post மனைவியை தாக்கிய கணவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: