நர்சிங் கல்லூரி மாணவிக்கு காதல் டார்ச்சர் வாலிபர் போக்சோவில் கைது செய்யாறு அருகே

செய்யாறு, ஜூன் 28: செய்யாறு அருகே நர்சிங் கல்லூரி மாணவிக்கு காதல் டார்ச்சர் கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வெம்பாக்கம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது மாணவி. செய்யாறில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த மாணவி கல்லூரிக்கு சென்று வரும்போது சுமங்கலி கிராமத்தை சேர்ந்த கருணாகரன்(24) என்பவர், தன்னை காதலிக்கும்படி கூறி தொல்லை கொடுத்து வந்தாராம். இந்நிலையில், நேற்று முன்தினம் மாணவி வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டிற்கு வந்து கொண்ருந்தார். அப்போது, கருணாகரன் அந்த மாணவியை திடீரென வழிமறித்து தன்னை காதலிக்கும்படி மீண்டும் வற்புறுத்தினாராம். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதை பார்த்ததும் கருணாகரன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இதுகுறித்து மாணவி செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லதா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கருணாகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post நர்சிங் கல்லூரி மாணவிக்கு காதல் டார்ச்சர் வாலிபர் போக்சோவில் கைது செய்யாறு அருகே appeared first on Dinakaran.

Related Stories: