தட்டார்மடத்தில் இந்து சாம்ராஜ்ய தின விழா

சாத்தான்குளம், ஜூன் 28: தட்டார்மடத்தில் இந்து முன்னணி கிளை சார்பில் இந்து சாம்ராஜ்ய தின விழா நடந்தது. தூத்துக்குடி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்தர் தலைமை வகித்தார். சாத்தான்குளம் ஒன்றிய பொதுச்செயலாளர் மாயவன் முத்துசாமி வரவேற்றார். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சக்திவேலன் கலந்து கொண்டு இந்து சாம்ராஜ்ய தின விழா பற்றியும், சத்ரபதி சிவாஜி வாழ்க்கை வரலாற்றையும் எடுத்துரைத்தார். தொடர்ந்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய இந்து முன்னணி துணை தலைவர் கலியமுத்து, பொருளாளர் ஐயப்பன் முத்து, செயற்குழு உறுப்பினர் செல்வமுத்துகுமார், கிளை கமிட்டி உறுப்பினர் செல்வக்குமார், கிளை பொறுப்பாளர் தம்புரஜா, ஒன்றிய இந்து அன்னையர் முன்னணி பொதுச் செயலாளர் பேச்சியம்மாள், பாஜ பிரமுகர்கள் சரவணன், கிருஷ்ணன், நம்பிராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். தட்டார்மடம் இந்து முன்னணி கிளை பொறுப்பாளர் செல்வக்குமார் நன்றி கூறினார்.

The post தட்டார்மடத்தில் இந்து சாம்ராஜ்ய தின விழா appeared first on Dinakaran.

Related Stories: