இருளில் மூழ்கியது டெல்லி

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் மண்டோலாவில் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து டெல்லிக்கு 1200 மெகாவாட் மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் நேற்று மதியம் 2.11 மணியளவில் இந்த துணை மின் நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து காரணமாக டெல்லிக்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரம் தடைப்பட்டது. இதனால், நேற்று பிற்பகல் 2 மணி முதல் கிழக்கு மற்றும் மேற்கு டெல்லியில் கடுமையான மின்தடை ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு வரை மீண்டும் மின்சாரம் வரவில்லை. இதனால், தலைநகர் டெல்லியில் பெரும் பகுதி இருளில் மூழ்கி உள்ளது.

The post இருளில் மூழ்கியது டெல்லி appeared first on Dinakaran.

Related Stories: