தீவிரவாத தொடர்பு; 4 ஊழியர்கள் டிஸ்மிஸ்: காஷ்மீர் ஆளுநர் அதிரடி


ஸ்ரீநகர்: தீவிரவாதிகளுடன் தொடர்புடைய 2 போலீசார் உட்பட 4 பேரை காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்கா பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். போலீஸ் கான்ஸ்டபிள்களான அப்துல் ரஹ்மான் தார், குலாம் ரசூல் பட், ஆசிரியர் ஷபீர் அகமது,நீர் வளத்துறை ஊழியர் அனயத்துல்லா ஷா பீர்ஸாதா ஆகியோர் பணியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் ஆவர். ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 4 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என ஆளுநர் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தீவிரவாத தொடர்பு; 4 ஊழியர்கள் டிஸ்மிஸ்: காஷ்மீர் ஆளுநர் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: