பணம் பரிவர்த்தனை செய்யப்படுகிறதா? கரூர் மாவட்டத்தில் 6 நாட்கள் டாஸ்மாக் மதுக்கடை மூடல்

கரூர்,ஏப்.16: கரூர் மாவட்டத்தில் 6 நாட்கள் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும் என தேர்தல் அலுவலர் தங்கவேல் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பொதுத்தேர்தல், மகாவீர் ஜெயந்தி தினம் மற்றும் மே தினத்தினை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுபானக்கூடங்கள் மற்றும் எப்எல் 2, எப்எல்3 உரிமங்கள் உள்ள ஓட்டல்களில் செயல்பட்டு வரும் மதுபானக்கூடங்கள் ஆகியவை 6 நாட்களில் உலர் நாட்களாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நாளான வரும் 17ம்தேதி முதல் 19ம் தேதி வரை 3 நாட்கள் காலை 10 மணி முதல் 12 மணி வரையும், தேர்தல் எண்ணிக்கை தினமான வரும் 4-6-2024ம்தேதி (செவ்வாய்க்கிழமை) அன்றும் டாஸ்டமாக் மதுபானக்கடைகள் மூடப்படும். அதுபோல் வருகிற 21ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மகாவீர் ஜெயந்தி தினத்தன்றும், 1-5-2024ம்தேதி (புதன்கிழமை) மே தினத்தன்றும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.

எனவே இந்த நாட்களில் அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மற்றும் எப்எல்2 எப்எல்3 உரிமங்கள் உள்ள மதுபானக்கூடங்கள் ஆகியவை மூடப்பட்டிருக்க வேண்டும். விற்பனை முடக்கம் செய்யப்பட வேண்டும். இந்த தினங்களில் விதிகளை மீறி மதுபானம் விற்பனை செய்யும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் எப்எல்2, எப்எல்3 பார் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

The post பணம் பரிவர்த்தனை செய்யப்படுகிறதா? கரூர் மாவட்டத்தில் 6 நாட்கள் டாஸ்மாக் மதுக்கடை மூடல் appeared first on Dinakaran.

Related Stories: