நாடாளுமன்ற தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, காவலர்களுக்கான வாக்குச்சாவடி அமைவிடங்கள் ஒதுக்கீடு பணி

கரூர், ஏப். 14:நாடாளுமன்ற தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, கரூர் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட தங்கவேல் தேர்தல் பார்வையாளர்கள் ராகுல் அசோக் ரெக்காவார், (பொது), அமித்குமார் விஸ்வகர்மா (காவல்) ஆகியோர் முன்னிலையில், வாக்குப்பதிவு நாளன்று கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குப்பதிவு மையங்களில் காவல் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கான வாக்குச்சாவடி அமைவிடங்கள் ஒதுக்கீடு செய்யும் பணியை இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தின் மூலம் கணினி சுழற்சி முறையில் துவக்கி வைத்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தால், நாடாளுமன்ற தேர்தல் 2024 அறிவிக்கப்பட்டு, அதன்படி , கரூர் மாவட்டத்தில் 19ம் தேதி நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், கிருஷ்ணராயபுரம் அரவக்குறிச்சி, குளித்தலை ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளில் கரூர் நாடாளுமன்ற தேர்தல் 2024 வாக்குப்பதிவிற்காக 1052 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் கரூர் சட்டமன்றதொகுதியில் 95 வாக்குச்சாவடி அமைவிடங்களும், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 160 வாக்குச்சாவடி அமைவிடங்களும், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் 204 வாக்குச்சாவடி அமைவிடங்களும், குளித்தலை சட்டமன்ற தொகுதியில் 165 வாக்குச்சாவடி அமைவிடங்களும் என மொத்தம் 624 வாக்குச்சாவடி அமைவிடங்களில் என 652 காவலர்கள், தலைமைகாவலர்கள், சிறப்புகாவல் ஆய்வாளர்கள் காவல் பணியில் ஈடுபடவுள்ளனர்.

தொடர்ந்து 652 காவலர்களுக்கும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் காவல் பணியில் ஈடுபடுவதற்கு வாக்குச்சாவடி அமைவிடங்கள் ஒதுக்கீடு செய்யும் பணியை இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தின் மூலம் கணினி சுழற்சி முறை யில் துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சையது காதர், தாசில்தார் (தேர்தல்) முருகன், உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

The post நாடாளுமன்ற தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, காவலர்களுக்கான வாக்குச்சாவடி அமைவிடங்கள் ஒதுக்கீடு பணி appeared first on Dinakaran.

Related Stories: