சாத்தான்குளம், ஏப். 7: சாத்தான்குளத்தில் இருந்து அமுதுண்ணாகுடி வழியாக நெல்லை நோக்கி நேற்று முன்தினம் (5ம்தேதி) அரசு பஸ் புறப்பட்டு சென்றது. ஆழ்வார்திருநகரி அருகேயுள்ள மழவராயநத்தம் பகுதியைச் சேர்ந்த ராஜப்பா என்பவர் டிரைவராக பணியில் இருந்தார். அமுதுண்ணாகுடி சி.எஸ்.ஐ. சர்ச் அருகே சென்றபோது அப்பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன்(40) என்பவர் போக்குவரத்துக்கு இடையூறாக மதுபோதையில் சாலையில் பைக்குடன் நின்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவரிடம் பைக்கை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு அரசு பஸ் டிரைவர் ராஜப்பா கூறினார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அர்ஜுனன், பஸ்சில் ஏறி டிரைவர் ராஜப்பாவை தாக்கினார். இதில் காயம் அடைந்த அவர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதலில் ஈடுபட்ட அர்ஜுனன், சென்னையில் லாரி டிரைவாக உள்ளார். இதுகுறித்து அரசு பஸ் டிரைவர் ராஜப்பா அளித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் ஏட்டு முருகேசன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ஏசு ராஜசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் விசாரணை நடத்தி தலைமறைவாக உள்ள லாரி டிரைவர் அர்ஜுனனை தேடி வருகின்றனர்.
The post சாத்தான்குளம் அருகே அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல் appeared first on Dinakaran.