ஈடி சோதனையில் வாஷிங்மெஷினில் சிக்கிய பணம்

புதுடெல்லி: சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின்கீழ் கபிரிகார்னியன் ஷிப்பிங் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் விஜய் குமார் சுக்லா மற்றும் சஞ்சய் கோஸ்வாமி, லட்சுமிடன் மரைடைம், இந்துஸ்தான் இன்டர்நேஷனல், எம். ராஜ்நந்தினி மெட்டல்ஸ் லிமிடெட், ஸ்டாவர்ட் அலாய்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், பாக்யநகர் லிமிடெட், விநாயக் ஸ்டீல்ஸ் லிமிடெட், வசிஷ்டா கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குனர்கள் சந்தீப் கார்க், வினோத் கேடியா ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

டெல்லி, ஐதராபாத், மும்பை, குருக்ஷேத்ரா, கொல்கத்தா ஆகிய இடங்களில் இந்த சோதனை நடந்தது. இந்த சோதனையின் போது வாஷிங்மெஷினில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. மேலும் முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள், ரூ. 2.54 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 47 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

The post ஈடி சோதனையில் வாஷிங்மெஷினில் சிக்கிய பணம் appeared first on Dinakaran.

Related Stories: