400 தொகுதிகளை வென்றால்தான் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பீர்களா?: அமித் ஷாவுக்கு கபில் சிபல் கேள்வி

டெல்லி: 400 தொகுதிகளை வென்றால்தான் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பீர்களா? என அமித் ஷாவுக்கு கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; 400 தொகுதிகளில் வெற்றி பெறாவிட்டால் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க மாட்டீர்களா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். முதலில் சீனா ஆக்கிரமித்த 4,000 கி.மீ. நிலப் பகுதியை மீட்டுக் கொண்டு வாருங்கள் என்று அமித் ஷாவுக்கு கபில் சிபல் பதிலடி கொடுத்துள்ளார்.

 

The post 400 தொகுதிகளை வென்றால்தான் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பீர்களா?: அமித் ஷாவுக்கு கபில் சிபல் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: