வட இந்தியாவில் 95 இடங்கள் பறிபோகும்; பாஜ கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்காது: நிர்மலா சீதாராமனின் கணவர் கணிப்பு

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் பாஜ கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்காது. பாஜவுக்கு 200 முதல் 220 சீட்களில் மட்டுமே வெற்றிக் கிடைக்கும் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பிரபல பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர் கணித்துள்ளார்.

இது குறித்து பரகலா பிரபாகர் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
மக்களவை தேர்தலில் பாஜவுக்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது. பொருளாதார முறைகேடு, அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் சமூகத்தில் பாஜ பிளவு ஏற்படுத்த முயற்சிப்பது அவர்களுக்கு எதிராக திரும்பியுள்ளது. விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை பாஜ இழந்துவிட்டது.

மக்களவை தேர்தலில் பாஜவுக்கு அதிகபட்சமாக 200 முதல் 220 இடங்கள் மட்டுமே கிடைக்கும். இதற்கு முக்கிய காரணம் வட இந்தியாவில் 80 முதல் 95 இடங்களை பறிகொடுக்கும். குறிப்பாக மகாராஷ்டிரா, பீகாரில் பாஜவுக்கு மரண அடி விழப்போகிறது. அந்த இரு மாநிலங்களிலும் சொற்ப தொகுதிகளில் தான் பாஜ வெற்றி பெறும்.

பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்காது. அதாவது அந்த கூட்டணி 272 இடங்களுக்கு குறைவாகவே வெற்றி பெற முடியும். வரும் ஜூன் 5ம் தேதி பாஜ அல்லாத கூட்டணி அரசு பதவி ஏற்கும் என்று எதிர்பார்க்கிறேன். இவ்வாறு பரகலா பிரபாகர் கூறினார்.

The post வட இந்தியாவில் 95 இடங்கள் பறிபோகும்; பாஜ கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்காது: நிர்மலா சீதாராமனின் கணவர் கணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: