தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவுறுத்தல் கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் பங்குனி தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

 

கரூர், மார்ச் 25: கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் பங்குனி தேரோட்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்தியாவில் உள்ள ஈஸ்வரன் கோயில்களில் பிரசித்தி பெற்ற கோயில்களில் கரூர் பசுபதீஸ்வரர் கோயில் ஒன்றாகும் . இக்கோயிலில் கரூரார் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பம்சமாகும். கரூர் அலங்காரவள்ளி, சவுந்தரநாயகி உடனுறை கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருந்திருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோயிலின் தெற்கு பிரகாரத்தில் விநாயகர், வள்ளி, தெய்வானையுடன், சுப்பிரமணியர் உற்சவ மூர்த்திகள் முன்னிலையில் பசுபதீஸ்வரர், அலங்காரவள்ளி, சவுந்தரநாயகி திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் கோயிலில் அலங்கார கோலத்தில் இருந்த பசுபதீஸ்வரர், அலங்காரவள்ளி, சவுந்தரநாயகி உற்சவர் சிலைகளுக்கு முன்பு யாகம் வளர்க்கப்பட்டு அம்பாள்களுக்கு திருமாங்க ல்யம் அணிவிக்கப்பட்டு, தீபாராதனைகள் நடைபெற்றன. நேற்று தேரோட்டத்தை முன்னிட்டு தேர் அலங்கரிக்கப்பட்டது.

தேரில் பசுபதீஸ்வரர், அலங்காரவள்ளி, சவுந்தரநாயகி எழுந்தருளினர். தேரோட்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஈஸ்வரன் கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.கோயில் நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இன்று (25ம் தேதி) நடராஜ மூர்த்திக்கு அபிஷேகம், தரிசனம். தீர்த்தவாரி. இரவு ரிஷப வாகன வழிபாடு நடக்கிறது. நாள்தோறும் காலை 7 மணி மற்றும் மாலை 6.30 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. விழா நாட்களில் சொற்பொழிவு, இசை நிகழ்ச்சி நால்வர் அரங்கில் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை தக்காரும், உதவி ஆணையருமான ஜெயதேவி, செயல் அலுவலர் சரவணன் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்துள்ளனர்.

The post தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவுறுத்தல் கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் பங்குனி தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர் appeared first on Dinakaran.

Related Stories: