கரூர் நகர வீதிகளில் மளிகை பொருட்கள் விற்பனை அமோகம்

 

கரூர், மார்ச் 25: கரூரில் தெரு பகுதிகளில் மளிகை பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. இதனை மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பாக குறிப்பிட்ட ஒரு பொருள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வரவேண்டும் என்றால் மாத கணக்கில் நாள் கணக்கில் ஆகும். குறிப்பிட்ட மளிகை பொருள் ஒரு சில பகுதியில் இருந்து மட்டுமே கிடைக்கும் என்ற நிலை இருந்து வந்தது. ஆனால் இன்றைய குளோபல் பொருளாதாரம் வளர்ச்சியின் காரணமாக எல்லா துறைகளிலும் பல்வேறு வளர்ச்சி கண்டுள்ளது.முன்பெல்லாம் ஒரு சில பொருட்கள் நாம் கடையில் மட்டுமே அல்லது வாரச்சந்தையில் போய் வாங்க வேண்டிய நிலை இருந்து வந்தது.ஆனால் இன்று அனைத்து பொருட்ளும் தெருவிற்கு விற்பனைக்கு வந்துள்ளது.

இதன் அடிப்படையாக கரூர், சர்ச் கார்னர் ,கோவை ரோடு, லைட் ரோஸ் ,கார்னர் , ஆர்டிஓ ஆபீஸ் அருகில், வாங்க பாளையம் ,வெங்கமேடு மற்றும் கரூர் பல்வேறு பகுதிகளில் நாமக்கல், சேலம் ஆகிய பகுதியில் விளையும் கொத்தமல்லி குண்டூரில் விளையும் வத்தல், திண்டுக்கல் கிருஷ்ணகிரியில் பகுதியில் விளையும் புளி அதன் தரத்திற்கு ஏற்றார் போல் விற்பனை செய்கின்றனர். ஒரு கிலோ மல்லி ரூ.140 , மிளகாய் வத்தல் ரூ. 200 ,பூண்டு ரூ. 150
புளி ரூ.100 மல்லி ரூ. 140 ,நாட்டு மல்லி ரூ. 160 என்ற அடிப்படையில் பொருளின் தரத்திற்கு ஏற்றார்போல் விற்பனை செய்யப்படுகிறது.இதனால் பொதுமக்களும் கடைகளுக்கு சென்று அலையாமல் வீட்டின் அருகிலே பொருட்கள் கிடைப்பதால் விரும்பி வாங்கி செல்கின்றனர்.

 

The post கரூர் நகர வீதிகளில் மளிகை பொருட்கள் விற்பனை அமோகம் appeared first on Dinakaran.

Related Stories: