தினமும் மாலையில் படியுங்கள் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு பறவைகளுக்கு தண்ணீர் வைக்க ஆயிரம் குடிநீர் தொட்டி வழங்கல்

கரூர்,மார்ச் 23:ரக்ஷனா சமூக அமைப்பின் கீழ் பறவை இனங்களை காக்கவும், நீர்நிலைகளை அதிகரிக்க,பறவைகள் தண்ணீர் குடிக்க இலவசமாக 1000 தண்ணீர் தொட்டிகளையும் வழங்கும் நிகழ்ச்சிகரூர் தலைமை போஸ்ட் ஆபீஸ் அலுவலகம் அருகில் நடைபெற்றது. ரக்ஷனா சமூக அமைப்பின் நிர்வாகி சங்கீதா தெரிவித்ததாவது:தோட்டங்கள் மற்றும் காடுகளில் 5 அடி மற்றும் 10 அடி ரவுண்ட் உள்ள சிறிய காங்கிரீட் குளங்களையும் கொடுக்கப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் சிறிய தண்ணீர் தொட்டியின் மூலம் தண்ணீர் ஊற்றி பறவைகளுக்கு வீடுகளிலும், தோட்டங்களிலும், காடுகளிலும் வைக்கலாம். இதில் தொடர்ந்து தண்ணீர் வைக்கும் பொழுது தினந்தோறும் 10 முதல் 50 பறவைகள் வரை வந்து தண்ணீர் குடிக்க வாய்ப்புள்ளது. .உலக மொத்த பறவை இனங்கள் 10,000-க்கும் மேல் உள்ளன. இதில் இந்தியாவில் மட்டும் 1266 பறவை இனங்கள் உள்ளன. இதில் 100 பறவை இனங்கள் அழிந்து விட்டன. மேலும் அழியாமல் அவற்றை தடுக்கவும் நாம் பறவைகளுக்கு வீடு தோறும், காடுகள் தோறும் பறவைகளுக்கு நாம் முடிந்த வரை தண்ணீர் வைப்போம், பறவைகளுக்கு தண்ணீர் வைக்கும் ஒவ்வொரு நபரும் ஒரு சமூக சேவகரே.

எதற்காக பறவைகளுக்கு உலக தண்ணீர் தினத்தன்று தண்ணீர் வைக்க வேண்டும் என்று கூறுகிறோம் என்றால் பறவைகள் தன் உணவுக்காக பழங்களை உண்டு கொட்டைகளை தன் எச்சம் மூலம் விதைகளாக ஆங்காங்கே தூவி மரங்களை உருவாக்கி இயற்கையை பெருக்குகின்றன. இயற்கையால் மழை பொழிவு ஏற்பட்டு நீர் நிலைகள் உருவாக பறவைகள் காரணமாகின்றன. இத்தகைய நீர் நிலைகள் உருவாக மூலாதாரமாக பறவைகள் எச்சம் மூலம் துவங்கி ஒரு சங்கிலி தொடராக நீர் நிலையாக உருவாகிறது. இவ்வாறு உலகில் பொழியும் மழைநீரில் 60 சதவீதம் இந்த முறை மூலமாக பறவைகளால் மட்டுமே உருவாகிறது என்றுகூட கூறலாம்.

ஆதலால் மனிதனுக்கு வாழ்வாதாரமாகிய தண்ணீரை உருவாக்கும் பறவைகளுக்கு நாம் வீடுதோறும், காடுதோறும் தண்ணீர் வைப்போம். பறவை இனங்களை நாம் காத்தால் பறவை இனங்கள் நம்மை காக்கும். ஆதலால் உலக தண்ணீர் தினத்தன்று பறவைகளை காக்க 1000 தண்ணீர் தொட்டிகளையும், 5 அடி, 10 அடி கான்கிரீட் குளங்களையும் இலவசமாக கொடுத்து கட்டிக் கொடுக்கின்றோம்.தேவைப்படுவோர் எங்களை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

The post தினமும் மாலையில் படியுங்கள் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு பறவைகளுக்கு தண்ணீர் வைக்க ஆயிரம் குடிநீர் தொட்டி வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: