அலுவலர்கள் அக்கறையுடன் செயல்படவேண்டும் தோகைமலை, கடவூர் பகுதியில் குறுவை சாகுபடி நடவு பணிகள் நிறைவு

தோகைமலை. மார்ச் 23: தோகைமலை மற்றும் கடவூர் ஒன்றிய பகுதிகளில் (கோடை) குறுவை சாகுபடியில் நடவு பணிகள் நிறைவு பெற்ற நிலையில் தற்போது களை எடுக்கும் பணிகளில் தீவிரம்காட்டி வருகின்றனர். கரூர் மாவட்டம் தோகைமலை மற்றும் கடவூர் ஒன்றிய பகுதிகளில் கனிசமான அளவில் (கோடை) குறுவை சாகுபடியை தொடங்கி உள்ளனர். குறுவை சாகுபடியில் நடவு பணிகள் நிறைவு பெற்ற நிலையில் தற்போது களை எடுக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தோகைமலை ஒன்றியங்களில் நெய்தலூர், சேப்ளாப்பட்டி, முதலைப்பட்டி மற்றும் குளித்தலை பகுதிகள், நங்கவரம், நச்சலூர், குறிச்சி, சூhpயனூர் போன்ற பகுதிகளில் ஆற்றுப் பாசனமாகவும், கள்ளை, தளிஞ்சி, தோகைமலை, நாகனூர், கழுகூர், ஆர்ச்சம்பட்டி, ஆர்டிமலை, புழுதோி, வடசோி, ஆலத்தூர், பாதிரிபட்டி உட்பட 17 ஊராட்சிகள் கிணறு, ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் குளத்துப் பாசன பகுதிகளாகவும் இருந்து வருகிறது. இதேபோல் கடவூர் ஒன்றிய பகுதிகளில் உள்ள 20 ஊராட்சிகளும் ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் குளத்துப் பாசன பகுதிகளாகவும் உள்ளது.

ஆண்டுகள் தோறும் பருவ மழை முறைப்படி பெய்து வந்தால் அப் பகுதிகளில் விவசாய பணிகளில் எப்போதும் பரபரப்பாக காணப்படுவார்கள். கடந்த ஆண்டு பருவமழை குறைவால் காவிரியில் நீர்வரத்து குறைந்தது. இதனால் காவிரி ஆற்றிலிருந்து கரூர் கட்டளை மேட்டுவாய்க்கால் பகுதியில் இருந்து வரும் காவிரிநீர் நிறுத்தப்பட்டது. இதனால் வாய்க்கால் பகுதியை ஒட்டியுள்ள பாசனப் பகுதிகளில் சம்பா சாகுபடி பணிகளை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் இந்த பகுதிகளில் ஆழ்குழாய் கிணறு உள்ள விவசாயிகள் மட்டும் சம்பா சாகுபடியை செய்தனர். இதேபோல் கடவூர் பகுதிகளிலும் போதிய மழை இல்லாமல் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்தால் கிணற்று பாசனங்கள், குளத்து பாசனங்கள் அனைத்தும் முற்றிலும் அழிந்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு பருவமழை கணிசமான அளவில் பெய்தது. இதனை அடுத்து கிணற்றுப்பாசன விவசாயிகள் சம்பா சாகுபடி செய்து அறுவடை செய்தனர். தற்போது கிணறுகளில் தண்ணீர் இருப்பதால் சம்பா அறுவடை முடிந்த பின்பு குறுவை (கோடை) சாகுபடியை கடந்த மாதம் தொடங்கினர். இதில் அட்ய பொன்னி, கோ 51, எஎஸ்பி 16, ஆடுதுரை 36 போன்ற ரகங்களை விவசாயிகள் தேர்வு செய்து நடவு பணிகளை தொடங்கி உள்ளனர்.
கோடை நெல் (குறுவை) மணிகள் 105 நாட்களில் இருந்து 110 நாளில் மகசூல் பெறும் மேற்படி ரக விதை நெல், 30 கிலோ கொண்ட ஒரு மூட்டை ரூ.1150 முதல் ரூ.1300 வரை தனியார் கடைகளில் பெற்று விதைத்து உள்ளனர்.

ஒரு ஏக்கருக்கு 45 கிலோ வரை விதை நெல் தேவைப்படுவதாகவும் கூறுகின்றனர். சம்பா அறுடை பணிகளை முடித்த விவசாயிகள் குறுவை (கோடை) சாகுபடிக்கான நடவு பணிகளை கடந்த மாதம் தொடங்கினர். இந்த நடவு பணிகள் கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த நிலையில் தற்போது நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் நடவு பணிகளை தொடங்கிய விவசாயிகள் தற்போது களை எடுக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

The post அலுவலர்கள் அக்கறையுடன் செயல்படவேண்டும் தோகைமலை, கடவூர் பகுதியில் குறுவை சாகுபடி நடவு பணிகள் நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: