புதுச்சேரியில் 22ம் தேதி விடுமுறை.. ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு..!!

புதுச்சேரி: ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு புதுச்சேரியில் 22ம் தேதி விடுமுறை அளித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. இதன் கும்பாபிஷேக விழா வரும் 22ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக, சிறப்பான ஏற்பாடுகளை கோவிலின் அறக்கட்டளை செய்து வருகிறது. கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள முக்கிய தலைவர்கள், பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். திரைத்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. சன்னியாசிகள், மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் என மொத்தம் 8,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் ராமர் கோவில் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய தொழில்துறை நிறுவனங்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 22-ந்தேதி பிற்பகல் 2.30 மணி வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை விதித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, புதுச்சேரியில் வரும் 22ஆம் தேதி பொது விடுமுறை அளித்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்காக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post புதுச்சேரியில் 22ம் தேதி விடுமுறை.. ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: