இது தேர்வர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு படிப்பதற்கு உதவியாக இருந்து வருகிறது. அதன்படி, அடுத்த ஆண்டுக்கான(2024ம் ஆண்டு) ஓராண்டு தேர்வு கால அட்டவணையை டிசம்பர் 2வது வாரத்தில் டிஎன்பிஎஸ்சி வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024ம் ஆண்டுக்கான அறிவிப்பில் 30 விதமான போட்டித் தேர்வுகள் மூலம் சுமார் 15 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கான விவரங்கள் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது.
இந்த தகவல் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத தயாராகி வரும் தேர்வர்களுகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டு நடத்தப்பட்ட குரூப் 1, குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளது. மேலும் 245 சிவில் நீதிபதி பணியிடங்களுக்கான முதன்மை தேர்வு முடிவுகளும் அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளது. வனத்துறை பாதுகாவலர் பணியிடங்களுக்கான குரூப் 1ஏ தேர்வு முடிவு ஜனவரி மாதம் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The post டிஎன்பிஎஸ்சி சார்பில் 15,000 காலி பணியிடங்கள் நிரப்ப ஓராண்டு கால தேர்வு அட்டவணை: டிசம்பர் 2வது வாரம் வெளியீடு appeared first on Dinakaran.
