மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன் சந்திப்பு: கரும்பு டன்னுக்கு ரூ.4000 வழங்க வலியுறுத்தல்

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கனகராஜ், டி.ரவீந்திரன் ஆகியோர் நேரில் சந்தித்து பேசினார்கள். அப்போது, தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் கால்நூற்றாண்டு கோரிக்கையான ஓய்வூதிய பிரச்னைக்கு தீர்வு கண்டது குறித்து பாராட்டு தெரிவித்தனர்.

அதேசமயம், சத்துணவு ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்களின் மிகக்குறைந்த ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக கணக்கிட்டு உரிய பலன்களை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அதேபோன்று, 2021ம் ஆண்டு மின்வாரியத்தில் கேங்மேனாக பணியில் இணைந்தவர்களுக்கு கள உதவியாளர்களாக பதவி மாற்றம் செய்ய வேண்டும், இடைநிலை ஆசிரியர்களை அழைத்துப் பேசி சுமுகமான முறையில் தீர்வு காண வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதைக்கேட்டுக் கொண்ட முதல்வர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்த கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் முருகானந்தம், நிதித்துறைச் செயலாளர் உதயச்சந்திரன், முதல்வரின் முதன்மைச் செயலாளர்கள் உமாநாத், எம்.எஸ்.சண்முகம் உடனிருந்தனர்.

 

Related Stories: