இந்நிலையில் வாணியம்பாடியில் உள்ள வீட்டில் இனியவள் மட்டும் தனியாக வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு இவரது வீட்டின் வெளியே நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் வீட்டு ஜன்னல் கண்ணாடி, அங்கிருந்த வாகனம் ஆகியவை சேதமானது. இதுதொடர்பான புகாரின்பேரில் வாணியம்பாடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நாட்டு வெடிகுண்டு வீசியதாக சென்னை தாம்பரத்தை சேர்ந்த சுப்புராஜ் (28), பாலாஜி (29) ஆகிய 2 பேரை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். அவர்களை வாணியம்பாடிக்கு இன்று அழைத்து வந்து நாட்டு வெடிகுண்டு வீசியதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
The post ரயில்வே ஊழியர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய 2 பேர் அதிரடி கைது: சென்னையை சேர்ந்தவர்கள் appeared first on Dinakaran.
