கோவையில் ஈச்சனாரி விநாயகர் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு

கோவை: கோவை, ஈச்சனாரி விநாயகர் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று நடைபெற்ற கோயம்புத்தூர் மாவட்டம், ஈச்சனாரி அருள்மிகு விநாயகர் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து, அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில் மற்றும் கோட்டைமேடு, அருள்மிகு அகிலாண்டேசுவரி உடனுறை சங்கமேசுவரர் சுவாமி திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு சென்று அங்குள்ள திருத்தேர்கள் மற்றும் பாதுகாப்பு கொட்டகைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்து சமய அறநிலையத்துறை தனது நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், குடமுழுக்குகள் நடத்துதல், திருக்குளங்களை சீரமைத்தல், திருத்தேர்களை புனரமைத்தல், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், திருக்கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பலிருந்து மீட்டெடுத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கோயம்புத்தூர் மாவட்டம், ஈச்சனாரி அருள்மிகு விநாயகர் திருக்கோயிலுக்கு 19 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.1.04 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்று திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அதனைத் தொடர்ந்து, கோவை, அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில் மற்றும் கோட்டைமேடு, அருள்மிகு அகிலாண்டேசுவரி உடனுறை சங்கமேசுவரர் சுவாமி திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு சென்று அங்குள்ள திருத்தேர்கள் மற்றும் பாதுகாப்பு கொட்டகைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் பேரூர் ஆதீனம் தவத்திரு சாத்தலிங்க மருதாசல அடிகளார், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கிராந்தி குமார் பாடி இ.ஆ.ப., கிணத்துகடவு சட்டமன்ற உறுப்பினர் திரு.செ.தாமோதரன், கோவை மாநகராட்சி மேயர் திருமதி கல்பனா ஆனந்தகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.நா.கார்த்திக், திரு.தொ.அ.ரவி, திரு.தளபதி முருகேசன், இணை ஆணையர் திரு. பெ.ரமேஷ், உதவி ஆணையர்கள் திரு.சி.கருணாநிதி, திருமதி ரா.விஜயலட்சுமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post கோவையில் ஈச்சனாரி விநாயகர் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: