ரூ.10 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை எம்எல்ஏ முருகேசன் திறந்து வைத்தார்

 

பரமக்குடி, ஜூன் 14: பரமக்குடி அருகே விருந்தோனி ஊராட்சிக்கு உட்பட்ட முத்துச்செல்லாபுரம் கிராமத்தில், சர்ச் முன்பகுதியில் தண்ணீர் தேங்குவதால் வழிபாடு செய்வதற்கும் தேர் செல்லும் சாலை மேடு பள்ளமாக இருப்பதால் விழா காலங்களில் தேர் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. ஆகையால், சர்ச் முன் பகுதி மற்றும் தேர் செல்லும் பாதையில் சாலைகள் அமைத்துத் தருமாறு முத்து செல்லாபுரம் கிராம மக்கள் எம்எல்ஏ முருகேசனிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் தனது சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைத்து அதனை நேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி முன்னாள் மேற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், கிளை செயலாளர் சவரிமுத்து, இளைஞரணி அந்தோணி தாஸ், நிர்வாகிகள் உலகநாதன்,மாரிமுத்து, மகளிர் அணி அல்போன்ஸ்சா உள்ளிட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post ரூ.10 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை எம்எல்ஏ முருகேசன் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: