சென்னை: சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது திருவொற்றியூர் கே.பி.சங்கர்(திமுக) பேசுகையில், எண்ணூரில் 25 பேருக்கு சாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மீதியுள்ளவர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேசுகையில் ‘‘ சட்டமன்ற உறுப்பினர் ஆர்டிஓ-வை சந்தித்து பேசி உள்ளார் அவர், மொத்தம் 35 காட்டுநாயக்கர் குடும்பங்களில், 25 குடும்பங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மீதம் இருக்கக்கூடிய குடும்பங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க சிறப்பு முகாம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வடசென்னை பகுதியில் மொத்தம் வசிக்கக் கூடிய 282 குடும்பங்களுக்கு எஸ்.டி., சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதில் இந்தப் பகுதியில் உள்ள 32 குடும்பங்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் பலர் இடம் மாறி வருவதால் சாதி சான்றிதழ் சரியாக இல்லை என அதிகாரிகளுக்கும் பிரச்னை உள்ளது. மத்திய மாநில அரசுக்கு வேலைக்கு செல்லும் போது பிரச்னை ஏற்படுகிறது. தவறான சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் நிலை ஏற்படுகிறது, ரத்தம் சம்பந்தமான உறவுகள் இருந்தால் சான்றிதழ் வழங்குவதில் பிரச்னை இல்லை. முறையான ஆவணங்கள் இருந்தால் சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.The post காட்டுநாயக்கர் வகுப்பு மக்களுக்கு எஸ்டி சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்: திருவொற்றியூர் எம்எல்ஏ வலியுறுத்தல் appeared first on Dinakaran.
