மெகபூபாவுக்கு வீட்டுக்காவல்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி 2 யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. இதையொட்டி அங்குள்ள முக்கிய அரசியல், பிரிவினைவாத தலைவர்கள், முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி உள்ளிட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இவர்களில் 14 மாதங்களுக்கு பின்னர் கடந்தாண்டு அக்டோபரில் மெகபூபா விடுதலை செய்யப்பட்டார். இதற்கிடையே, புல்வாமாவின் டிரால் பகுதியில் ராணுவத்தினரின் தாக்குதலால் காயமடைந்த குடும்பத்தினரை சந்திக்க முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி செல்ல இருந்தார். இந்நிலையில், மெகபூபா முப்தி தான் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில், `ராணுவத்தால் தாக்கப்பட்டதாக கூறப்படும் குடும்பத்தினரை சந்திக்க டிரால் செல்ல முயன்ற போது, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டேன். எனது வீட்டின் வாசலை மறித்து ராணுவ வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. இதுதான் உண்மை நிலை,’ என்று கூறியுள்ளார்….

The post மெகபூபாவுக்கு வீட்டுக்காவல் appeared first on Dinakaran.

Related Stories: