மண் கடத்தலை தடுக்க நடவடிக்கை

கடத்தூர், மார்ச் 21: கடத்தூர் பகுதிகளில் அரசு ஒப்பந்த பணிகளுக்கு அனுமதியின்றி மண் கடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒசஅள்ளி ஊராட்சியில் புதுபட்டி, பாசரபட்டி, பெருமாகோவில்பட்டி உள்ளிட்ட 7 சிறிய கிராமங்களை கொண்டுள்ளது. பெருமாள் கோவில்பட்டி முதல் பாசாரப்பட்டி வரையில் 3.5 கிலோ மீட்டர் தொலைவிற்கு ₹3.89 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிக்கு கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்து தற்பொழுது பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர், ஊராட்சி அனுமதியின்றி பல லட்சம் டன் செம்மண் எடுத்து சாலை பணிக்கு பயன்படுத்தி வருகின்றனர்., இதை தடுக்க ஊராட்சி மன்றத் தலைவர் ஆறுமுகம், சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்ட செம்மண் கடத்தப்படுவது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட துணை ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் பேரில் விசாரணை நடத்தி ஊராட்சி கணக்கில் ₹3 லட்சம் செலுத்துமாறு ஒப்பந்ததாரருக்கு மாவட்ட கூடுதல் ஆட்சியர் தீபனா விஸ்வேஸ்வரி கூறிச்சென்றார்.  ஆனால் பொய்யான அனுமதி கடிதத்தை காட்டி தொடர்ந்து மண் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர் என, ஊர் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: