மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க அழைப்பு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் 7 இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ள நிலையில், இத்திட்டத்தில் பயன்பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டத்தில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், கிராமப்புற மற்றும் நகர்புறங்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் மானிய விலையில் அடுக்குமாடி குடியிருப்பு மொத்த ஒதுக்கீட்டில் 5 சதவீத  இட ஒதுக்கீட்டின்படி வழங்கிட 7 இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது.

ஆதி திராவிட வகுப்பினருக்கு பயனாளிகளின் பங்களிப்புடன் அரூர் நம்பிப்பட்டி, பீச்சான்குட்டை, பி.மல்லாபுரம் கொண்டகரஅள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி  மோலையானூர், பென்னாகரம் போடூர், பொதுப்பிரிவினருக்கு காரிமங்கலம் முக்குளம், நல்லம்பள்ளி நல்லம்பள்ளி ஆகிய இடங்களில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்படுகிறது. எனவே, இந்த பகுதிகளில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் பயனாளியின் பங்குத்தொகை செலுத்த விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அடுக்குமாடி குடியிருப்புகள் மொத்த ஒதுக்கீட்டில் 5 சதவீத இட ஒதுக்கீட்டின்படி முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.  இந்த வாய்ப்பை தர்மபுரி மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் பெற்று பயன்பெறலாம். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர், கலெக்டர் அலுவலகம், தர்மபுரி என்ற முகவரியில் வரும் 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.  இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: