42 ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி

தர்மபுரி, மார்ச் 18: தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி துறை மற்றும் நீர்வள துறையின் கட்டுபாட்டில் உள்ள 42 ஏரிகளில், விவசாய பயன்பாட்டிற்கு இலவசமாக வண்டல் மண் எடுக்க வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்திலிருந்து அனுமதி வழங்கப்பட உள்ளது. ஏரியின் பெயர் மற்றும் கிராமங்கள் விவரம் வருமாறு: பென்னாகரம் வட்டத்தில் மரவத்திபள்ளம் ஏரி, சுஞ்சல் நத்தம்,  பள்ளிப்பட்டி ஏரி, பெரும்பாலை,    வத்திமரதஅள்ளி ஏரி, பனைகுளம், வானதி ஏரி, பனைகுளம்,  சித்தாரஅள்ளி ஏரி, பனைகுளம், கரியப்பனஅள்ளி குட்டை, கரியப்பனஅள்ளி, திப்பராசன் குட்டை, கிட்டனஅள்ளி, ஏரங்காட்டு ஏரி குட்டை, சஜ்ஜலஅள்ளி, கெம்மன் குட்டை, பளிஞ்சரஅள்ளி, நல்லாம்பட்டி ஏரி, நல்லாம்பட்டி, பள்ளிப்பட்டி மேல் ஏரி, பள்ளிப்பட்டி, பெரியூர் ஏரி, பெரியூர் ஆகிய கிராமங்களில் ஏரிகளில் வண்டல் மண் எடுக்கலாம்.

தர்மபுரி வட்டாரத்தில் அன்னசாகரம் ஏரி, அன்னசாகரம், குருபரஅள்ளி ஏரி, குப்பூர், குப்பூர் குருமன் குட்டை, குப்பூர், சத்திரம் ஏரி, ஆலங்கரை ஏரி, புது ஏரி, எம்.ஒட்டப்பட்டி, மாரவாடி ஏரி, மாரவாடி, நல்லம்பள்ளி வட்டாரத்தில் மாதேமங்கலம் ஏரி, மாதேமங்கலம், அதியமான் கோட்டை ஏரி, அதியமான் கோட்டை, லளிகம் ஏரி, இலளிகம், ஏலகிரி பெரிய ஏரி, ஏலகிரி, சின்ன ஏரி, மானியதஅள்ளி, புட்டன் கொட்டாய் ஏரி, பொடாரன்கொட்டாய், சேசம்பட்டி ஏரி, சேசம்பட்டி, பாப்பன் குட்டை, பாகலஅள்ளி, பளையதாதனூர் ஏரி, பளையதானூர், கொமத்தம்பட்டி ஏரி, கொமத்தம்பட்டி, பொம்மசமுத்திரம் ஏரி, பொம்மசமுத்திரம், பள்ளப்பட்டி ஏரி, பள்ளப்பட்டி, காரிமங்கலம் வட்டாரத்தில் ஜோதிப்பட்டி ஏரி (கோவில் ஏரி), ஜோதிப்பட்டி, மோட்டூர் ஏரி, சுண்ணம்பட்டி, அரூர் வட்டாரத்தில், பாப்பன் ஏரி, கொத்தனம்பட்டி, மோட்டுகரிச்சி ஏரி, வடுகப்பட்டி, கவுண்டன் குட்டை, கீரைப்பட்டி, கொளகன் ஏரி, கூடலூர், மயிளன் ஏரி, கம்மாலப்பட்டி, ஒடசல்பட்டி ஏரி, ஒடசல்பட்டி, கடத்தூர் வட்டாரத்தில், கட்டையன் ஏரி, அம்பாளப்பட்டி சேரி, பெரிய ஏரி, கோபிசெட்டிபாளையம், கோட்ரப்பட்டி ஏரி (பூலப்பநாய்க்கன் ஏரி), கோட்ரப்பட்டி ஆகிய 42 ஏரிகளில் வண்டல் மண் எடுத்துக்கொள்ளலாம்.

வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகளின் வசிப்பிடம், விவசாய நிலம் அல்லது வண்டல் மண் எடுக்கப்பட வேண்டிய ஏரி, அதே வருவாய் கிராமம் அல்லது அருகில் உள்ள வருவாய் கிராமத்தின் எல்லை வரம்பிற்குள் அமைத்திருக்க வேண்டும். வண்டல் மண் எடுக்க விருப்பமுள்ள விவசாயிகள், உரிய விண்ணப்ப படிவத்தினை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலக மூலம் பெற்று சிட்டா மற்றும் அடங்கல் ஆவணங்களுடன் கிராம நிர்வாக அலுவலர் சான்று பெற்று, சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில், வரும் 20ம் தேதி முதல் (திங்கள்) விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும். விவசாய நிலங்களுக்கு என வழங்கப்படும் வண்டல் மண் பிற பயன்பாட்டிற்கு பயன்படுத்த கூடாது. இவ்வாறு கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

Related Stories: