பிளஸ்1 பொதுத்தேர்வில் 19,479 மாணவர்கள் பங்கேற்பு

தர்மபுரி, மார்ச் 15: தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ்1 தேர்வு நேற்று தொடங்கியது. 19,479பேர் தேர்வு எழுதினர். 2,801பேர் தேர்வு எழுத வரவில்லை.தர்மபுரி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் பிளஸ்1 அரசு பொதுத்தேர்வு நேற்று காலை தொடங்கியது. தர்மபுரி மாவட்டத்தில் 102 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 4அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள், 1 ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி, 3 உண்டி உறைவிட மேல்நிலைப், 1 சமூக நலத்துறையின் மேல்நிலைப்பள்ளி, 5சுய நிதி மேல்நிலைப் பள்ளிகள் மற்றும்  63 மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 179 பள்ளிகளை சேர்ந்த 22,780பேர் தேர்வு எழுத விண்ணப்பம் செய்திருந்தனர். இதில், 19,479 பேர் தேர்வு எழுதினர். 2,801பேர் தேர்வு எழுத வரவில்லை. இம் மாவட்டத்தில் 82 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது.

பிளஸ்1 தமிழ் பாடப்பிரிவுக்கான தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கியது. பிற்பகல் 1.15 மணிக்கு முடிந்தது. தேர்வுக்கு முன்பாக முதல் 10 நிமிடம் வினாத்தாளை படித்து பார்ப்பதற்கும், அடுத்த 5  நிமிடங்கள் தேர்வர்களின் விவரங்களை சரி பார்ப்பதற்கும், பின்னர் தொடர்ந்து 3 மணி நேரம் தேர்வு எழுதுவதற்கும் அவகாசம் வழங்கப்பட்டது. தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், தர்மபுரி கல்வி மாவட்ட அலுவலர் ராஜகோபால் ஆகியோர் சேர்ந்தும், தனித்தனியாகவும் தர்மபுரி, அதியமான்கோட்டை, இலக்கியம்பட்டி, நல்லம்பள்ளி, தொப்பூர்  உள்ளிட்ட அரசு பள்ளிகளில் நடந்த பிளஸ்1 தேர்வுகளை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

தேர்வு முடிந்த பின்னர் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் விடைத்தாள் பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஒவ்வொரு தேர்வு மையத்திற்கு ஒரு போலீஸ், ஒரு ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இத்தேர்வு பணிகளில் 3500 அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 82 பறக்குபடையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். வினாத்தாள் கட்டுகள் பாதுக்காப்பு மையங்களில் 24 மணி நேரமும், ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில்

ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: